Breaking News

துபாய் எக்ஸ்போ 2020 புதிய தேதி அறிவிப்பு

உலக நாடு முழுவதும் (COVID-19) கொரோனா வைரஸ் பரவலை அடுத்து அமீரகத்தில் நடக்கவிருந்த பிரம்மாண்டமான வர்த்தக கண்காட்சியான (Dubai Expo 2020) துபாய் எக்ஸ்போ 2020 நிகழ்வை ஒரு வருட காலத்திற்கு ஒத்தி வைக்க முடிவுசெய்யப்பட்டது.



இந்த நிகழ்வை வழங்கும் பாரிஸை தலைமையிடமாக கொண்ட (BIE) பீரோ இன்டர்நேஷனல் டெஸ் எக்ஸ்போசிஷன் அமைப்பிடம் அமீரக அரசு துபாய் எக்ஸ்போக்கான புதிய தேதிகளை முன்மொழிந்துள்ளது. அதனபடி எதிர்வரும் 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி முதல் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரை நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.



இந்த புதிய தேதி முன்மொழிதலுக்கான அதிகாரபூர்வ கடிதத்தை, பீரோ இன்டர்நேஷனல் டெஸ் எக்ஸ்போசிஷன்(BIE) அமைப்பின் பொதுச்செயலாளர் டிமிட்ரி கேர்க்கென்ட்ஸ் அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது என்று அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் தெரிவித்துள்ளார்.



இந்த நிகழ்வின் அதிகாரப்பூர்வ பெயராக (Expo 2020) “எக்ஸ்போ 2020 துபாய்” ஐ தொடர்ந்து பயன்படுத்த ஐக்கிய அரபு அமீரக அரசும் ஒப்புதல் கோரியதாக (BIE) தெரிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவலை அடுத்து அமீரகம் மற்றும் வெளிநாடுகளின் அதிகாரிகள் இடையே நடந்த சந்திப்பின் பின்னர் ஆறுமாத காலம் நடக்க இருக்கும் இந்த பிரம்மாண்ட நிகழ்வை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று (BIE) தெரிவித்துள்ளது.




கருத்துகள் இல்லை