புதுச்சேரி மாநில மக்களை கொரோனாவில் இருந்து காப்பற்ற ஊரடங்கு நீட்டிக்ககூடும் !
புதுச்சேரி மாநில மக்களை கொரோனாவில் இருந்து காப்பற்ற ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மாநில அரசு தயாராக இருப்பதாக பாரத பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடன் மாநில முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினர் ஆலோசனையின் போது கொரோனா தொற்று மாநிலத்தில் பரவாமல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியை சேர்ந்த 4பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசமான மாஹே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்ணூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும் புதுச்சேரியில் உணவு பொருட்களின் தட்டுப்பாடு இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்ததை தொடர்ந்து மொத்த வியாபாரிகளை அழைத்து பேசும்போது வெளி மாநிலத்தில் இருந்து பொருட்களை கொண்டு வருவதன் காரணமாக தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்தாகவும், உணவு பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தமிழக, கர்நாடக அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததாக தெரிவித்தார் தொடர்ந்து பேசிய அவர் கிராமப்புறங்களில் வீடு, விடாக சென்று தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கொரோனா தொற்று குறித்து பரிசோதனை செய்து அதன் அறிக்கையை அரசுக்கு சமர்பிக்க வேண்டுமென கோரிக்கை வைத்ததாகவும் அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் கொரோனாவால் பல்வேறு நாடுகளில் அதிகப்படியான உயிரிழப்பு ஏற்பட்டு வரும் நிலையில் புதுச்சேரி மாநில
மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு என்றும் பொருளாதார பதிப்பு ஏற்பட்டாலும் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர் 14ஆம் தேதிக்கு பிறகு தேவைப்பட்டால் புதுச்சேரி மாநில மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற ஊரடங்கு சட்டத்தை நீட்டிக்க மாநில அரசு உதவ தயாராக உள்ளது என பிரதமருக்கு கடிதம் எழுத தெரிவித்தார்.
மத்திய அரசு தேவையான நிதி சில மாநிலங்களுக்கு அளித்துள்ள நிலையில் புதுச்சேரி மாநிலம் ஏன் புறக்கணிப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை எனவும் வேதனை தெரிவித்தார்.
தகவல் : Karaikal online
கருத்துகள் இல்லை