Breaking News

ஒரே கிளிக்கில் காய்கறிகள் பழங்கள் விற்கும் தமிழக அரசு !!


கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 2 வாரமாக ஊரடங்கு 144 உத்தரவு தமிழகத்தில் அமலில் இருக்கும் நிலையில், அத்தியாவசிய தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை கடைகள் மட்டும் மதியம் ஒரு மணிவரை திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இருப்பினும் வெளியே சென்று பொருள்களை வாங்க ஒரு சிலர் பயந்து வீட்டிற்குள்ளேயே உள்ளனர். இந்த நிலையில் பொதுமக்களின் காய்கறிகள் மற்றும் பழங்களின் தேவையை கணக்கில் கொண்டு தமிழக அரசு தோட்டக்கலைத்துறை E - Thottam மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்க முடிவு செய்துள்ளது.



தோட்டக்கலை துறையின் இணையதளத்தில் சென்று ஆன்லைனில் ஆர்டர் செய்தால் ஆர்டர் செய்த பொருட்கள் வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. காய்கறி மற்றும் பழங்களை 3 தொகுப்பாக பிரித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்படி ரூபாய் 300, 500 மற்றும் 600 என்ற வகையில் காய்கறி தொகுப்புகளும், ரூபாய் 500, 600, மற்றும் 800 என்ற வகையில் பழங்கள் தொகுப்புகளும் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் இதில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தொகுப்பை தேர்வு செய்து ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

மிக வேகமாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் காய்கறிகள் மற்றும் பழங்களுக்காக பொதுமக்கள் வெளியே செல்லாமல் தோட்டக்கலை துறையின் இணையதளத்தின் மூலமாக ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை