Breaking News

விரைவில் பட்டதாரிகளுக்கு சான்றிதழ் வழங்க SIO கோரிக்கை !



பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி சான்றிதழ்கள் பெறாதவர்களுக்கு விரைந்து சான்றிதழ்கள் வழங்கிட எஸ்ஐஓ நேரில் வலியுறுத்தல்

 

இன்று எஸ்ஐஓ மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் தலைமையிலான குழு பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் எல்.கணேசன் அவர்களைச் சந்தித்தது.

2021, 2022 ஆகிய ஆண்டுகளில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் பட்டப் படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு இன்னும் பட்டதாரி சான்றிதழ் வழங்கப்படாத நிலை குறித்தும், அதனால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.


அமைப்பிற்கு பதிலுரைத்த பல்கலைக்கழக பதிவாளர்,

தற்சமயம் தட்கல் திட்டத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதாகவும், கூடிய விரைவில் இவ்விஷயம் தீர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.


எஸ்ஐஓவின் சார்பில் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.


குழுவில் மண்டல ஒருங்கிணைப்பாளர் முஹம்மது தவ்ஃபீக், திருச்சி மாவட்ட நிர்வாகி அப்துல் அஜீஸ் உள்ளிட்டோர் இருந்தனர்.

கருத்துகள் இல்லை