Breaking News

அதிரையில் நடந்த SSMG எழுவர் கால்பந்து தொடர் போட்டி... United 7’s Nagore VS Manachai 7’s Manachai

 


இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் SSM குல்முகம்மது நினைவு எழுவர் கால்பந்து தொடர் போட்டி ஆண்டுதோறும் அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறும். இதில் மாநில மற்றும் தேசிய அளவிலான அணிகள் பங்கேற்று விளையாடும்.



இன்று நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தை அதிரை நகரமன்ற தலைவர் MMS. தாஹிரா அம்மாள் அப்துல் கரீம், நகரமன்ற துணைத்தலைவர் இராம. குணசேகரன், கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாஅத் தலைவர் V.M.A. அகமது ஹாஜா, செயலாளர் P.G.T. முஹம்மது இஸ்மாயீல், அனைத்து முஹல்லா கூட்டமைப்பு தலைவர் தாஜுதீன், கீழத்தெரு முஹல்லா தலைவர் ஜியாவுதீன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.




அந்த வகையில் அதிரையர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த ஆண்டுக்கான இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல்முகம்மது நினைவு 23ம் ஆண்டு எழுவர் கால்பந்து தொடர் போட்டி அன்று 09/06/2023 மாலை கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்றது.



முதல் ஆட்டத்தில் மனச்சை 7s மனச்சை (Manachai 7’s Manachai) அணியினரும் யுனைடெட் 7s நாகூர் (United 7’s Nagore) அணியினரும் மோதினர். இப்போட்டி சரியாக திங்கள் கிழமை அன்று மாலை 5 மணிக்கு ஆரம்பமாகியது.

(யுனைடெட் 7s நாகூர்) -3, (மனச்சை 7s மனச்சை) -2, என்ற கோல் கணக்கில் வென்று முதல் சுற்றுப் போட்டியில் வென்றுள்ளனர். 

இதில் AFTAB 2 Goal மற்றும் FAIZAL 1 Goal அடித்து அசத்தினார்.

கருத்துகள் இல்லை