நாகூரில் முதல் முறையாக 80's கிட்ஸ் லெஜன்ட் கால்பந்து போட்டி...
நாகூரில் சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலவிதமான கிரிக்கெட், கால்பந்து, கேரம் போர்டு, பட்டம் விடும் திருவிழா, போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் பெரியவர்களுக்கான உற்சாகம் ஊட்டும் விளையாட்டு வகையில்...
நாகூரில் முதல் முறையாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஐவர் (5s) கால்பந்தாட்ட போட்டி நடைபெற உள்ளது..
இம்மாதிரியான போட்டி தமிழகமெங்கும் அங்கங்கே நடந்தாலும் நமது சுற்றுவட்டார பகுதியில் எங்கும் நடப்பதில்லை என்பதே உண்மை, எனவே அதன் முயற்சியாக இந்த வருடம் (யுனைடெட் FC) United FC Nagore இத்தொடர் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளது..
கால்பந்து ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இப்போட்டியை நடத்துவதற்கு நன்கொடை வழங்கியுள்ள அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது யுனைடெட் எஃப்சி நாகூர்..
குறிப்பு: இதில் விளையாடக்கூடிய அணிகள் உங்களது அணிகளை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்...
செல்: +91 97902 10580
இடம்: கே.ஆர்.சி மைதானம் நாகூர்.
நாள் : 30/09/2023
கருத்துகள் இல்லை