கடனில் இருந்து விடுபட சில அழகிய துஆக்கள்
• கடன் இல்லமால் வாழ்வதே அல்லாஹ்வின் மிக பெரிய அருட்கொடை தான் இன்றைய காலத்தில்!
• பலர் கடனால் ஒவ்வொரு நாளும் தங்களில்
நிம்மதியை இழந்து தவிக்கிறார்கள்!
• ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு தொழுகையிலும் கடனில் இருந்து பாதுகாப்பு தேடுங்கள்.
கடனில் இருந்து விடுபட மிக சிறந்த துஆ :
اللَّهُمَّ اكْفِنِي بِحَلالِكَ عَنْ حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
(அல்லாஹும்மஃபினீ ஃபி ஹலாலிக்க அன் ஹராமிக்க வஅக்னினீ ஃபீ ஃபள்லிக அம்மன் ஸிவாக்க)
பொருள் : யா அல்லாஹ்! நீ விலக்கியதை விட்டும் நீ ஆகுமாக்கியதை கொண்டும் எனக்கு போதுமாக்குவயாக! மேலும் உன் கிருபையைக் கொண்டு பிறரை விட்டு என்னைத் தேவயற்றவனாக்கி விடு!
- (நூல் : திர்மிதி : 3563)
கடன் சுமையில் இருந்து பாதுகாப்பு பெற :
اَللَّهُمَّ
إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ
(அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஃகலப்பதித் தைன்)
பொருள் : இறைவா! கடன் சுமை மற்றும் கடன் அதிகரித்தல் ஆகியவற்றிலிருந்து நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்!
- (நூல் : நஸயீ : 5380)
நபி (ஸல்) அவர்கள் கேட்ட அழகிய துஆ :
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ ، وَالْحَزَنِ ، والْعَجْزِ ، والْكَسَلِ ، والْبُخْلِ ، والْجُبْنِ ، وضَلَعِ الدَّيْنِ ، وغَلَبَةِ الرِّجَالِ
(அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி, வல்ஹஸனி, வல் அஜ்ஸி, வல்கஸலி, வல்புக்லி, வல்ஜுப்னி, வ ளலஇத் தைனி, வ ஃகலபத்திர் ரிஜால்)
பொருள் : இறைவா! (வருங்காலத்தைப் பற்றியக்) கவலையிலிருந்தும், (நடந்து முடிந்துவிட்டவை பற்றிய) துக்கத்திலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும கஞ்சத்தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்கு முறைகளிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்!
- (நூல் : புகாரி : 6363)
தவ்பா அதிகம் செய்யுங்கள் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவர் ‘இஸ்திஃபார்’ (பாவமன்னிப்பு தேடுவதை) பற்றிப் பிடிப்பாரோ அவருக்கு அல்லாஹுதஆலா அனைத்து விதமான நெருக்கடிகளிலிருந்தும் வெளியேறும் வழியையும் ஏற்படுத்துவான். துன்பத்தை விட்டும் நீக்கி மகிழ்வை ஏற்படுத்துவான். கஷ்ட நஷ்டங்களை விட்டும் பாதுகாப்பளிப்பான். அவர் நினைத்துப்பாரா விதத்தில் அவருக்கு உணவளிப்பான். (நூல் : அபூதாவூத் : 1520)
நம்மை கடனை விட்டும் கடன் சுமையை
விட்டும் பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன்…
No comments