Breaking News

இஸ்ரேலை கண்டித்து ஆகஸ்ட் 8-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம்! அனைத்து சமுதாய மக்களும் கலந்துகொள்ள கோரிக்கை!



சென்னைபாலஸ்தீனில் அப்பாவி மக்களை கொலை செய்யும் இஸ்ரேலை கண்டித்தும், மத்திய அரசு இஸ்ரேலுடனான உறைவை துண்டிக்க வலியுறுத்தியும் ஆகஸ்ட் 8-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.  இதில்  அனைத்து சமுதாய மக்களும் கலந்துகொள்ளுமாறு முஸ்லிம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ஹனிபா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
கடந்த 35 நாட்களாக சர்வேதேச போர் விதிமுறைகளையும் மீறி உலக நாடுகளின் கோரிக்கையையும் ஏற்காமல் மனிதாபிமானமற்ற முறையில் காசா மீது இஸ்ரேல் கொடூர தாக்குதலை நடத்திவருகிறது. இதுவரை 1800 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 80 சதவிகிதம் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் ஐ.நா வின் பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், பள்ளிக்கூடங்கள், ஆம்புலன்ஸ்கள் என எதையும் பார்க்காமல் கண்மூடித்தனமான தாக்குதலை இஸ்ரேல் நடத்திவருகிறது. இந்த தாக்குதலை கண்டிப்பதற்கு கடமைப்பட்ட மத்திய அரசு இதை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.
 
இஸ்ரேலின் இந்த தாக்குதல் மனிதாபிமானத்திற்கும் சர்வேதேச விதிமுறைகளுக்கும் மனித தன்மைக்கும் எதிரானது. இந்த கொடூர தாக்குதலை நிகழ்த்தி வரும் இஸ்ரேலை கண்டித்தும், பாலஸ்தீன பகுதியில் இருந்து இஸ்ரேல் இராணுவத்தை விலக்கிக்கொள்ள வலியுறுத்தியும், மத்திய அரசு இஸ்ரேல் உடனான உறவை துண்டிக்க வலியுறுத்தியும் வரும் 8-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன்பு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மாலை 3:30 மணியளவில் நடைபெறவுள்ளது.
 
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து இஸ்லாமிய பெருங்குடி மக்களும், அனைத்து சமுதாய மக்களும், சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்களும், மனித நேயத்தை விரும்புபவர்களும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments