வெளி நாட்டில் வேலை செய்பவர்கள் இழப்பவை என்னென்ன?

- புதிதாக ஒரு அயல் தேசத்தில் நாம் வாழப் பழகிக் கொள்வது எளிதல்ல. புதிய கலாச்சாரம், புதிய மொழி, புதிய மனிதர்கள், அறியாத சட்டங்கள் மற்றும் சமூக அமைப்பு.
- நாம் அடிக்கடி தொலைந்து போனதாக உணர்பவை வசதிகள், அன்பான வீடு, பழகிய வீதிகள், அன்பான புன் சிரிப்புக்கள் அத்துடன் எதுவும் நடக்காது என்ற தெம்பு.
இதோ நாம் நம் நாட்டை விட்டு அயல் தேசம் புறப்பட்டதும்
தொலைந்து போகும் 15 விசயங்கள்.
1. மக்கள். ஆமாம், மக்கள். 120 கோடி. வெளி நாடு போனதும் நாம் அதை உணர முடியும். இங்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளது போல் உணர்வீரகள். விரையும் வாகனங்கள் மட்டும் தான் தெரியும்.
2. சப்தம். காய்கறி வியாபாரியின் கூவல், எப்போதாவது வரும் குப்பை வண்டி, மதியம் தூங்கும் நேரம் பார்த்து சரியாக வரும் வியாபாரிகள், வீட்டிற்குள் வேலைக்காரியின் நடமாட்டம், தெருவில் வண்டிகள் ஸ்டார்ட், ஸ்டாப், ஸ்கிரீச் சப்தங்கள், காதைப் பிளக்கும் பாடல்கள், பாங்கு, கோவில் மணி ஓசைகள் இவையெல்லாம் இங்கு உங்களுக்கு தொலைந்து போன சங்கீதமாய் தோன்றும்.
3. நண்பர்கள். பால்யகால நண்பர்கள், பஸ்ஸில் ஏறும் போது இடித்துக் கொண்டதால் மட்டுமே அறிமுகமானவர்கள்,ஸ்வீட் வாங்கும் போது சலுகை அல்லது இனாமாக தரும் ரெஸ்டாரணட் முதலாளி, வாடிக்கையான பார்பர் எல்லாம் இங்கு தொலைந்து போனதாய் உங்களுக்கு தோன்றும்.
4. திரு விழா உற்சாகம். எத்தனைதான் பார்ட்டிகளில் கலந்து கொண்டாலும், நமது ஊரில் திருவிழாக்கள்,பெருநாள், கந்தூரி காலங்களில் உள்ள உற்சாகங்கள், பிடித்தமான ஸ்வீட், உணவு, அலங்கரிக்கப்பட்ட திருவிழா மார்க்கட்,ஜவுளிக் கடை எல்லாம் உங்களுக்கு ஞாபகத்திற்கு வரும்.
5. வளைந்து கொடுத்தல். அறியாமல் செய்யும் தவறான U- டர்ன், தெரியாமல் சாக்லேட் தாள் எறிதல், அனுமதி இல்லாத இடத்தில் புகைபிடித்தல் போன்ற முதன் முறையாக செய்யும் சின்னஞ் சிறிய தவறுகளுக்கு கூட வெளி நாடுகளில் அபராதம் கட்டும் போது, நமதூர் அட்ஜஸ்ட்மென்ட் தான் ஞாபகத்திற்கு வரும்.
6. வேலைக்காரி. ஊரில் என்னதான் வேலைக்காரியை இடையிடையே வராமல் இருப்பதற்கும் மற்றும் தரையை சரியாக சுத்தம் செய்யாததற்கும் தினமும் திட்டியிருந்தாலும், வெளி நாட்டில் நாமே எல்லா வேலைகளையும் செய்யும் போது அம்மாவை விட வேலைக்காரி தான் தேவையாய்த் தோன்றும்.
7. ரிக் ஷா மற்றும் ஆட்டோ. வெளி நாட்டில் என்ன தான் அல்ட்ரா-பாஸ்ட் மெட்ரோ மற்றும் நேரம் தவராத பஸ் என்று இருந்தாலும் அவைகளைப் பிடிப்பதற்கு நீண்ட தூரம் நடந்து தான் ஆக வேணடும். எவ்வளவு தான் ரிக் ஷா மற்றும் ஆட்டோ டிரைவர்கள் நம்மிடம் கூடுதல் பணம் கேட்டு தகராறு பண்ணியிருந்தாலும், வெளி நாட்டில் இருக்கும் போது தான் உணர்வீரகள் நாம் போக வேண்டிய இடங்களுக்கு போவதற்கு அவர்கள் எவ்வளவு உதவியாய் இருந்தாரகள் என்பதை.
8. பக்கத்து வீட்டு உதவி நம் நாட்டில் பக்கத்து வீட்டில் உதவி தேட வேண்டிய அவசியமே இல்லை. தானாகவே வந்து உரிமையுடன் கொஞ்சம் சக்கரை, டீ, பால், தண்ணீர், தயிர், உப்பு, வேறு ஏதாவது மளிகை சாமான்கள் இரவல் கேட்டு வருவார்கள். ஆனால் வெளி நாட்டில் பக்கத்து வீட்டு காலிங் பெல்லை அடிப்பதை யோசித்துக் கூட பார்க்க முடியாது.
9. வீட்டுச் சாப்பாடு. வெளி நாட்டில் என்னதான் மிகப் பெரிய 5 ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பிட்டாலும், சமைப்பது எப்படி என்று எத்தனை புத்தகங்கள் படித்து சமைத்தாலும் சரி, நம் அம்மாக்கள் சமைத்துத் தந்த சமையல் மணம் வெளி நாட்டில் கிடைப்பதில்லை.
10. உடல் நலம் குறையும் போது தனிமை. உடல் நலம் இல்லாத போது தான் உங்களுக்கு அதிகமாக அம்மா மற்றும் வீட்டு ஞாபகம் வரும். அம்மாவின் மடியில் தலை வைத்து சாப்பிட்ட தருணங்கள் போல் வருமா?என்று தோன்றும்.
11. நினைத்த நேரம். வெளி நாட்டில் எல்லாமே திட்டமிட வேண்டும். வேலை, வெகேசன், வார நாட்கள், லீவு நாட்கள், ஷாப்பிங், அப்பாயிண்ட்மென்ட், வீட்டு வேலை எல்லாமே ஏற்கனவே திட்டமிட்டபடி காலண்டர் பிரகாரம் தான் ஆனால் நம் நாட்டில் எல்லாமே நம் இஷ்டம் போல், நினைத்த நேரத்தில் நடத்தலாம்.. இங்கு நண்பர்களை கூட 30 நிமிட இடைவெளியில் சினிமாவிற்கு கூப்பிட முடியாது..
12. பேரம் பேசும் சுகம்.. வெளி நாட்டில் கார் வாங்குவதானாலும் சரி, காய்கறி வாங்குவதானாலும் சரி, பேரம் பேசுவதற்கு வாய்ப்பே கிடையாது. எல்லாவற்றிற்குமே விலை நிரணயிக்கப் பட்டிருக்கும். அப்படியே பேரம் பேச ஆரம்பித்தால் பதிலாக நமக்கு கிடைப்பது, இல்லை என்பதற்கான முக பாவம் அல்லது வருத்தம் தெரிவிக்கும் ஒரு புன்னகை. அவ்வளவு தான். நம் நாட்டில் எல்லாவற்றையும் பேரம் பேசி வாங்கிய திருப்தி இங்கு கிடைக்காது.
13. தினசரி சாகசம்.. வெளி நாட்டில் எல்லோரும் பயத்துடன் சட்ட திட்டங்களுக்கு கட்டுப் பட்டு வாழ்வதால்,இயந்திரத் தனமான காட்சிகள் தான் தோன்றும். நம் நாட்டில் என்ன தான் சட்ட திட்டங்கள் இருந்தாலும் நாம் தினசரி கண்டு ரசித்த அடி, தடி, சண்டை. சச்சரவு, வேடிக்கை, வண்ண மயங்கள் இங்கு இல்லை.
14. கிரிக்கட் கும்மாளம். நம் நாட்டில் கிரிக்கட் மாட்ச் பார்க்கும் போதுள்ள உற்சாகம், கடைசி நிமிட ஆர்வம்,ஜெயித்ததும் அடிக்கும் கும்மாளம் எல்லாம் இங்கு முடியாது.
15. மருத்துவம். நம் நாட்டில் சாதாரண தும்மலுக்குக் கூட ENT ஸ்பெஷலிஸ்ட், தொண்டை கரகரப்பிற்கு நடு ராத்திரியில் கூட பேமிலி டாக்டரை கலந்து, அவர் கூறும் நமக்கு ஏற்கனவே தெரிந்ததைக் கொண்டு வாய் கொப்பளிக்கும் வசதி வெளி நாட்டில் கிடையாது. டாக்டரைப் பார்ப்பதற்கு அப்பாய்ண்ட்மென்ட் வாங்கிக் காத்திருக்க வேண்டும்.

தகவல் : தி. ரஹ்மத்துல்லா
கருத்துகள் இல்லை