Breaking News

இலவசக் கணினிப் பயிற்சி சென்னையில் நடத்துகிறது.


சென்னை : பயிலகம் மென்பொருள் பயிற்சி நிறுவனம் மொசில்லா நிறுவனத்துடன் இணைந்து இலவசக் கணினிப் பயிற்சி நிகழ்ச்சிகளைச் சென்னையில் நடத்துகிறது.
 கட்டற்ற மென்பொருளைப் (Open Source) பரப்பி வரும் மொசில்லா (Mozilla) நிறுவனம், ‘படைப்பாளர் கொண்டாட்டம்’  (‘Maker Party’) என்னும் கணினி சார்ந்த நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் முன்னெடுத்து வருகிறது.  எல்லாத் தரப்பு மக்களுக்கும் கணினித் தொழில்நுட்பத்தை இலவசமாகக் கொண்டு சேர்ப்பதும் கணினி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்நிகழ்ச்சிகளின் நோக்கமாகும்.
 சென்னை வேளச்சேரியில் பயிலகம் மென்பொருள் பயிற்சி நிறுவனம் மொசில்லா நிறுவனத்துடன் இணைந்து இந்நிகழ்ச்சிகளை  நடத்தவுள்ளது.  இந்நிகழ்ச்சிகளில்
பங்கேற்கக் கட்டணம் ஏதுமில்லை.  வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
 அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கணினி வினாடி வினாப் போட்டி:
வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி, அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கணினி வினாடி வினாப் போட்டி நடத்தப்படவுள்ளது.
 செய்தியாளர்களுக்குக் கணினிப் பயிற்சி:
 செய்தியாளர்களுக்கு செப்டம்பர் 14ஆம் தேதி, வலைப்பூ வடிவமைப்பு, இணையத்தள வடிவமைப்பு ஆகியன பற்றி வகுப்பு நடத்தப்படவுள்ளது.
 நிகழ்ச்சி விவரம்:
 03.08.2014 – பட்டதாரி இளைஞர்களுக்கு மெயின்பிரேம் (Mainframe) அறிமுகம்
 10.08.2014 – அரசு, அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்குக் கணினி வினாடி வினா
15.08.2014 – கல்லூரி மாணவர்களுக்குப் பொருள் நோக்கு நிரலாக்கம் (Object Oriented Programming) – ஓர் அறிமுகம்
17.08.2014 – கல்லூரி மாணவர்களுக்குக் கட்டற்ற மென்பொருள் பற்றி அறிமுகம்
24.08.2014 – வீட்டுப்பெண்மணிகளுக்கு மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் பற்றிய அறிமுகம்
31.08.2014 – மூத்த குடிமக்களுக்கு இணையத் தொழில்நுட்பம்
07.09.2014 – பட்டதாரி இளைஞர்களுக்கு லினக்ஸ் (Linux) அறிமுகம்
14.09.2014 – செய்தியாளர்களுக்கு வலைப்பூ வடிவமைப்பு, இணையத்தள வடிவமைப்பு பற்றிய அறிமுக வகுப்பு
 நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்.
முன்பதிவு செய்யத் தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண்: 8344777333.
மின்னஞ்சல் முகவரி: info@payilagam.com,
இணையத்தள முகவரி: www.payilagam.com
முகவரி: பயிலகம் மென்பொருள் பயிற்சி நிறுவனம், விஜய நகர், வேளச்சேரி, சென்னை 42

கருத்துகள் இல்லை