வாட்ஸ்அப் யா…?
“ஹேய்… இந்த போட்டோ-ல நீ ஸ்மார்ட்டா தெரியுரடா!” , “தேங்க்ஸ் மச்சி!”
“இந்த வளையல் மாடல் ஓகே வா?”, “இது ஓல்ட் ஃபேஷன்-ங்க, வேற மாடல் எடுத்து அனுப்புங்க…”
இப்படி தொட்டு விடும் தூரத்தில் அனைவரையும் கொண்டு வந்து, நமது எ(தொ)ல்லைகளை விரிவு படுத்தி இருக்கிறது வாட்ஸ்அப்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளரும் விஞ்ஞான உலகில், “வாட்ஸ்அப்” பல “ஹேட்ஸ் ஆஃப்” களை பெற்று வருகிறது.
துரிதமான செய்தி சேவையும், குறைந்தபட்ச தரவுகளை மட்டுமே பயன்படுத்தி (Data Consumption) புகைப்படங்களையும், காணொளிகளையும் அனுப்புவது வாட்ஸ்அப்பின் சிறப்பம்சம்.
அடேங்கப்பா..
2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் (Brian Acton) மற்றும் ஜேன் கோம் (Jan Koum) ஆகியோரால் நிறுவப்பட்ட வாட்ஸ்அப் நிறுவனத்தால், வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது. இவர்கள் இருவரும் யாஹூ நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி, 500 மில்லியன் பயனர்களை தாங்கள் கொண்டுள்ளதாக தெரிவிக்கும் வாட்ஸ்அப், இச்செயலி மூலம் தினமும் 700 மில்லியன் புகைப்படங்களும், 100 மில்லியன் வீடியோக்களும், 10 பில்லியன் செய்திகளும் பரிமாறப்படுகின்றன என தெரிவித்துள்ளது.
சமூக அக்கறையும், சதி வலைகளும்
இச் செய்திகளில் பெரும்பாலானவை “ஹாய்…” வகையறாக்கள் என்றாலும், சமூக நலனில் அக்கறை கொண்டவர்கள், இத்தளத்தையும் திறன் மிக்கதாய் பயன்படுத்திட முனைகின்றனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர் என்பதை மறுக்கவியலாது.
ஆனால் சதிவலை பின்ன நூல் கொண்டு ஓடும் விஷமிகள், பொய்யான செய்திகளை உருவாக்கியும், உண்மைச் செய்திகளை திரித்தும், புகைப்படங்களை உருமாற்றியமைத்தும் (Morphing) வேகமாய் பரப்புகின்றனர்.
பல பயனர்கள் கடந்து நம்மை வந்தடையும் செய்திகளை, அதன் தோற்றம் குறித்து ஆராயாமல், நம்பகத்தன்மையை உறுதி செய்யாமல் உடனே பகிர்ந்து விடுகிறோம். அதனால் ஏற்படப் போகும் விளைவுகளையும் கருத்தில் கொள்வதில்லை. உண்மைச் செய்தியே ஆயினும், அதனை பரப்புவதால் என்ன நன்மை ஏற்படும் என்பதயும் அளவிடுவதில்லை.
அவ்வாறாயின் நம் குறிக்கோள் பரப்புவது மட்டுமே எனும் வட்டத்தில் சுருங்கி விடும். சமூக அக்கறையின்பால் பகிர நினைத்து, சதி வலைகளுக்கு பலியாகுதல் முறையாகுமா?
“தான் கேள்வியுற்றதை எல்லாம் பரப்புபவன் பொய்யன்” என்கின்றனர் நபிகள் நாயகம் (ஸல்). ஒரு வாட்ஸ்அப் செய்தி நம்மை பொய்யனாய் ஆக்கும் வலிமையை பெற வைக்கலாமா?
அண்ணலாரின் பிரார்த்தனைகள் அழகிய முகங்களுடன்
தற்போது இஸ்லாமிய இளம் தலைமுறையினர் மார்க்க விஷயங்களைப் பகிர்வதற்கு, வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்த துவங்கியுள்ளனர். பெண்ணியம் போற்றும் இறைமறை வசனங்கள், (ஹிஜாப் அணிந்து) முகத்தை மட்டும் திறந்த அழகுப் பெண்களின் உருவங்களோடு பகிரப்படுகிறது. அண்ணலாரின் பிரார்த்தனைகள், பிரார்த்தனை செய்யும் பெண்கள் படங்களோடு பகிரப்படுகிறது. இச்செயல்களை ஷைத்தான் நமக்கு அழகாக்கி காட்டுகின்றானோ என எண்ணத் தோன்றுகிறது.
- புகைப்படமற்று நபிமொழியை பகிர்ந்தால், நபிமொழி வலு இழந்து விடுமா?
- அல்லது நண்பர்கள் படிக்க மாட்டார்களா?
- அப்பெண்களின் புகைப்படங்கள் நபிமொழி இல்லாது, நாம் தனியே வைத்திருப்பது தகுமா?
- அத்தகைய புகைப்படங்கள் நம் ஸ்மார்ட் போனில் இருப்பது, யாருக்கும் உறுத்தாதது ஏன்?
- நபிமொழி கொண்டே நம்மை வழிகெடுக்க நவீன யுக ஷைத்தான் முயல்கிறானோ?
- அல்லது அவனது பரிவார (யூத கூட்ட)த்தின் சதி வலைகளில் இதுவும் ஒன்றா?
ஆய்ந்தறிய வேண்டிய அசுர கேள்விகளல்ல இவை… ஐந்தே நொடிகளில் பதில் கிடைக்கும் அட்டு கேள்விகள்தான். முடிவு நம் கையிலே!!
குறிப்பு: வைபர், டாக்ரே என அனைத்துக்கும் தனித்தனி கட்டுரை எழுத முடியாததால், இக்கட்டுரையை மற்ற செயலிகளுக்கும் பகிர்ந்து படித்துக் கொள்ளவும்.)
அனைத்தையும் பயன்படுத்துவோம் அறிவார்ந்த முறையிலே!!!!
கருத்துகள் இல்லை