Breaking News

Facebook இல் வீடியோ Auto-Play (தானாக) இயங்குவதை நிறுத்துவது எப்படி?





 
 
பேஸ்புக் News Feed இல் வீடியோ Auto Play ஆகி உங்கள் Data வை காலி செய்கிறதா? நிறுத்துவதற்கு இலகு வழி இதோ.

விபரம்







Facebook தளத்தில் அண்மையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களின் படி உங்கள் Facebook கணக்கிற்கான முகப்புப் பக்கத்தில் (News Feed) பகிரப்படும் வீடியோ கோப்புக்கள் தானாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே தேவையற்ற வீடியோ கோப்புக்களும் இவ்வாறு இயங்குவதனால் எமது தரவுப்பாவனை அதிகரிக்க வாய்ப்புண்டு. மேலும் இது சிலருக்கு சங்கடமாகக் கூட அமையலாம்.










எனவே இந்த வசதி உங்களுக்கு தேவையற்றது என நீங்கள் கருதினால் இதனை முடக்கிக் கொள்ளும் வசதியும் facebook தளத்தில் தரப்பட்டுள்ளது.
இவ்வாறு தானாக இயங்கும் வீடியோ கோப்புக்களின் செயற்பாட்டை நிறுத்திக் கொள்ள விரும்பினால் கீழுள்ள வழிமுறையை பின்பற்றுக.
❶ முதலில் உங்கள் Facebook கணக்கிற்குள் நுழையுங்கள்.
❷ பின் கீழுள்ள இணைப்பை சுட்டுங்கள்.


====> http://j.mp/FacebookVideoSetting-TAMILINFOTECH




❸ பின் Auto-Play Videos என்பதற்கு நேரே இருக்கும் Drop Down Menu இல் Off என்பதனை தெரிவு செய்க.
அவ்வளவு தான்.
இனி வீடியோ கோப்புக்கள் இயக்கினால் மாத்திரமே இயங்கும்.




★ மேற்குறிப்பிட்ட இணைப்பை சுட்டும் போது Auto-Play Videos என்ற ஒன்று தோன்றவில்லை எனின் வீடியோ கோப்புக்கள் தானாக இயங்கும் வசதி இன்னும் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கமாட்டாது.


★ மேற்குறிப்பிட்ட முறை கணனி மூலம் முகநூலை பயன்படுத்துபவர்களுக்கே பொருந்தும்.


★ நீங்கள் Smart சாதனங்களுக்கான Facebook Application மூலம் facebook தளத்தை பயன்படுத்துபவர் எனின் இதனை குறிப்பிட்ட மென்பொருளின் Setting பகுதியினூடாக மாற்றிக்கொள்ளவும் முடியும்.