Breaking News

[FACE BOOK] முகநூலில் கல்லூரி பேராசிரியரின் படத்திற்கு கமாண்ட் அடித்த கல்லூரி மாணவனுக்கு காவல் நிலையத்தில் அடி, உதை...

[FACE BOOK] முகநூலில் கல்லூரி பேராசிரியரின் படத்திற்கு கமாண்ட் அடித்த கல்லூரி மாணவனுக்கு காவல் நிலையத்தில் அடி, உதை: வலி, அவமானம் தாங்காமல் கல்லூரியில் மாணவன் தற்கொலை முயற்சி



காரைக்கால், ஆக.7/முகநூலில் கல்லூரி பேராசிரியரின் படத்திற்கு கமாண்ட் அடித்த, கல்லூரி மாணவனை, கோட்டுச்சேரி போலீசார் அடித்து, உதைத்து, மிரட்டியதால், வலி, அவமானம் தாங்காமல் கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காரைக்காலை அடுத்த காளிகுப்பம் பகுதியில் ஆர்.வி.எஸ் தனியார் பொறியியல் மற்றும் கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில், மதுரை வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த அப்துல் கரீம் மகன் நாகூர் மொய்தீன்(22) மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு படித்து வருகிறார். அதே ஆர்வி.எஸ் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வரும் காரைக்கால் பூவத்தைச் சேர்ந்த கார்த்திகா என்பவர் படம் முகநூலில் வெளியான போது, நாகூர் மொய்தீன் அப்படத்திற்கு கமாண்ட் அடித்துள்ளார்.




இது குறித்து, கார்த்திகா, தனது கணவர் ரவிக்குமாரிடம் புகார் செய்துள்ளார். ரவிக்குமார், கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்துவிட்டு, கோட்டுச்சேரி காவல் நிலையத்திலும் புகார் செய்துள்ளார். அதன் பேரில், நேற்று முன்தினம் கோட்டுச்சேரி போலீசார் நாகூர் மொய்தீனை காவல் நிலையத்திற்கு அழைத்து, காலை முதல் மாலை வரை திட்டி, கடுமையாக அடித்து, உதைத்து, கார்த்திகா காலில் விழுமாறு மிரட்டி அனுப்பியுள்ளனர்.


நேற்று கல்லூரிக்கு சென்ற நாகூர் மொய்தீனை, கல்லூரி நிர்வாகத்தினர் அசிங்கமாக திட்டி, கார்த்திகா காலில் விழுந்து மன்னிப்பு கோரும்படியும், பெற்றோரை அழைத்து வந்து கல்லூரி நிர்வாகத்திடம் மன்னிப்பு கோரும்படியும் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து, கல்லூரி வளாகத்திலிருந்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, கல்லூரிக்கு வருமாறு நாகூர் மொய்தீன் கேட்டு கொண்டுள்ளார்.


பின்னர், கல்லூரி வகுப்புக்கு சென்ற, நாகூர் மொய்தீன் கோட்டுச்சேரி, காவல் நிலையம் மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகளை குறித்து கூறி அழுதுள்ளார். தொடர்ந்து, நண்பர்களுக்கு தெரியாமல் கழிவறைக்கு சென்று பையில் வைத்திருந்த பூச்சிமருந்தை குடித்துவிட்டு, வகுப்பறையில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார்.
சக மாணவர்கள் நாகூர் மொய்தீனை காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் பேரில் நாகூர் மொய்தீன் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளார். இச்சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




தொடர்ந்து, காரைக்கால் ஆர்.வி.எஸ் கல்லூரி பேராசிரியை கார்திகா-வின் பொய் புகாரையடுத்து, மாணவனை தாக்கிய கோட்டுச்சேரி காவலர்கள், பேராசிரியை மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சக மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கூடி, துணை ஆட்சியர் மாணிக்க தீபனிடம் மனு வழங்கினர். மாணவனுக்கு ஆதரவாக, மாவட்ட தமுமுக-வினரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடினர் .


தகவல்: சியா மரைக்கார் தெரு