Breaking News

எச்சரிக்கை நீங்கள் ஐஸ்க்ரீம் பிரியர்களா ?


எச்சரிக்கை நீங்கள் ஐஸ்க்ரீம் பிரியர்களா?

எந்த Brand-ன்னு பார்த்து வாங்கி சாப்பிடுங்க!! இல்லேன்னா சொந்தக் காசுல சூனியம் வச்சுக்கிற கதைதான்!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்க்ரீமை விரும்பி சுவைக்காதவர்கள் இருக்க முடியாது. ஐஸ்க்ரீம்களில் ஏராளமான வகைள் உண்டு. கப் ஐஸ், கோன் ஐஸ், குல்ஃபி ஐஸ், பார் ஐஸ் இப்படி வகை வகையாக பல வடிவங்களில் பல சுவைகளில் கிடைக்கின்றன.

                                             

பொதுவாக ஐஸ்க்ரீம் தயாரிக்கும் நிறுவனங்கள் பால் சார்ந்த பொருட்களை யும் சர்க்கரையும் நறுமணத்தை தரக்கூடிய திரவங்களையும் சில வககைளில் உலர் பழங்களையும் முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற விதைகளையும் கொண்டு தயாரிக்கின்றார் கள். இதைத்தான் ஐஸ்க்ரீம் என்றுசொல்லப் படுகின்றது. இதனை தயாரிக்க கூடுதல் செலவாகின்றது.

ஆனால் ஒரு சில நிறுவனங்கள் இதற்கு மாற்றாக தாவர எண்ணைய், பாமாயில், க்ளுக்கோஸ் மற்றும் இதர வாசனை திரவியங்களை கொண்டு ஐஸ்க்ரீம்கள் தயரிக்கின்றனர். இந்த ஐஸ்க்ரீம்கள் frozen desert என்று சொல்லப்படுகின்றது. இவைகள் ஐஸ்க்ரீம்கள் இல்லை என்றாலும் இதைத் தயாரிக்கும் நிறுவனங்கள் 'ஐஸ்க்ரீம்' என்றே விளம்பரப்படுத்தி வந்தன. இந்த வகையான ஐஸ்க்ரீம்களை தயாரிக்க குறைந்த செலவே ஆகின்றது. ஆனால் விற்பனை செய்யப்படும் போது பாலில் தயாரிக்கும் நிறுவனங்களின் விலையிலே இந்த தயாரிப்பு களும் விற்கப்படுகின்றன.

                                                   


அந்த வகையில் மிகப்பிரபலமான Kwality Walls 'ice cream' எனும் பெயரில் 'frozen desert' வகையான க்ரீம்களை தயாரித்து ஐஸ்க்ரீம் என்று கடந்த பல வருடங்களாக மிகப் பெரிய அளவில் விற்பனை செய்து தனது தயாரிப்பினை மக்கள் மனதில் பதிய வைத்துள்ளது. இந்த நிறுவனத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் Hindustan Unilever நிறுவனம் வாங்கிய பிறகுதான் பிரச்சனை ஆரம்பித்தது.

Gujarath cooperative milk federation சார்பில் தயாரித்து விற்பனை செய்யப் படும் அமுல் ஐஸ்க்ரீமானது எல்லோராலும் நன்கு அறிமுகமான ஒன்று. இந்த நிறுவனம் தனது தயாரிப்பினை பால் மற்றும் இதர பொருட்களை கொண்டே தயாரிக்கின்றது.

                                                     


இந்த நிறுவனம் சார்பில் Hindustan Unilever மீது தொடரப்பட்ட வழக்கில் kwality wall ice cream என்ற தயாரிப்பில் இந்த நிறுவனம் தயாரிப்பது ஐஸ்க்ரீமே அல்ல என்றும் அது தனது தயாரிப்பில் frozen desert என்று மட்டுமே குறிப்பிடவேண்டும் என்றும் ஐஸ்க்ரீம் என்ற பெயர் இடம் பெறக்கூடாது என்றும் தொடரப்பட்ட வழக்கில் உண்மை இருப்பதை உறுதி செய்த நீதிமன்றம் இனி அந்த Brand-டில் ஐஸ்க்ரீம் என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என்று உத்திரவிட்டது. நீதிமன்ற உத்திரவினை ஏற்ற நிறுவனம் தன்னுடைய விளம்பரத்திலும் தனது தயாரிப்பிலும் ஐஸ்க்ரீம் என்ற வார்த்தையை நீக்கிவிட்டது.

                                                 

அதோடல்லாமல்அமுல் நிறுவனம்இந்த புகாரினை Advertising Standard Council of India விற்கும் அனுப்பியது. அதனடிப்படையில் தற்போது அனைத்து விளம்பரங்களிலும் தனது தயாரிப்பிலும் kwality wall என்று மட்டும் போடப் படுகின்றது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு kwaility என்றால் அது இன்னமும் ஐஸ்க்ரீம் என்றே தெரிந்துள்ளது அதனால் அதன் விற்பனை கொஞ்சம் கூட சரியவே இல்லை.

Frozen desert -க்கும் ice cream -க்கும் என்ன வேறுபாடு?

ஏன் frozen desert தயாரிப்பினை அதிகம் உண்ணக் கூடாது என்று ஆராய்ந் தால் frozen desert என்று சொல்லக் கூடிய அந்த வகையான ஐஸ்க்ரீம்களில் கெட்ட கொழுப்பு சத்தானது அதிகமாக உள்ளது. கால்சியம் இந்த frozen desert ஐஸ்க்ரீம் வகைகளில் ஒரு சதவீம் கூட இல்லை.

                                                
கீழே உள்ள தகவல் என்ன சொல்கின்றது என்று பாருங்கள். 

ICE CREAM:

For every 100 gm of serving
Energy - 217 KCal
Protein - 3.5 gm
Carbs - 21.5
Fat - 13%
Calcium - 176 mg
Frozen Dessert
Energy - 200 KCal
Fat - 10.5
Carbs - 23
Protein - 4
Saturated fat - 5.8
Trans-fat - traces 


(இதுவரை இது எவ்வளவு சதவீதம் என்று சொல்லப்படவில்லை)

இந்த Frozen Dessert கூறப்பட்டுள்ள ஐஸ்க்ரீம் வகைகளில் saturated
fat மற்றும் trans fat ஆகிய இரண்டும் உடல் நலத்திற்கு தீமை விளை விக்கக் கூடியவை. தொடர்ந்தாற் போல் இந்த வகையான Frozen Dessert ஐஸ்க்ரீம்களை குழந்தைகள் முதல் பெரியவர் வரை வாங்கி உண்பதால் அதிக கொழுப்புசத்து காரணமாக உடல் எடை அதிகரித்தல் கொலஸ்ட்ரால் கூடுதல் இதன் காரணமாக இரத்த அழுத்தம் மற்றும் இதயம் சம்மந்தமான நோய்கள் நிச்சயமாக ஏற்படும் என்று மருத்துவர்களால் சொல்லப்படுகின்றது.


                                     

எனவே ஐஸ்க்ரீம் வாங்கி உண்ணும் போது அது பாலில் தயாரிக்கப் பட்டதா அல்லது frozen desert ஆ என்பதை பார்த்து வாங்கி பயன் படுத்தவும். இல்லை என்றால் சொந்த பணத்தை கொடுத்து சூனியம் வைத்துக் கொள்ளும் நிலைதான் உருவாகும்.குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு இந்த வகையைான frozen desert மிகவும் ஆபத்தானது.