Breaking News

ஆன்லைனில் விற்பனையால் வியாபாரம் பாதிப்பு : கம்பெனிகளுடன் விவாதிக்க முடிவு

    


ஆன்லைன் வர்த்தகத்தினால் ஏற்படும் கடுமையான பாதிப்பு குறித்து, தீபாவளிக்கு பிறகு விவாதித்து முடிவு எடுக்க இருப்பதாக அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (கன்பெடரேஷன் ஆப் ஆல் இன்டியா ட்ரோடர்ஸ்  சிஏஐடி) தெரிவித்துள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பிலிப்கார்ட் கம்பெனி சமீபத்தில், மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை குறைந்த விலைக்கு சுமார் ரூ.600 கோடிக்கு ஒரே நாளில் விற்றது. இந்த அதிரடி ஆன்லைன் வியாபாரம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் பெரிய மற்றும் சிறிய வணிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  
இந்த ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் எப்படி பொருட்களை குறைந்த விலைக்கு விற்கமுடிகிறது என்பது குறித்து விவாதிப்பதற்காக சுமார் 50 முன்னணி கம்பெனிகளை அழைத்துள்ளதாகவும் சிஏஐடியின் பொதுச் செயலாளர் பிரவீன் கந்தல்வால் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை ஒரு அறிக்கையாக தயாரித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி கடந்த ஆறு மாதமாக சுமார் 20 முதல் 25 சதவீதம் அளவிற்கு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் தீபாவளி பண்டிகை முடிவதற்குள் 50 சதவீதம் அளவிற்கு வியாபாரம் பாதிக்கும் என்றும் சிஏஐடி தெரிவித்துள்ளது.