Breaking News

தொடக்க ஓவர்களில் நாங்கள் இன்னும் அதிரடியாக ஆட வேண்டும்: தில்ஷான் சொல்கிறார்

                             

அகமதாபாத்,

இலங்கை கிரிக்கெட் அணி தனது அணுகுமுறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் திலகரத்னே தில்ஷான் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில்  169 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறுகிறது

இதையொட்டி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரர் திலகரத்னே தில்ஷான் கூறியதாவது:- ”எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் நாம் சிறப்பாக தொடங்க வேண்டும். குறிப்பாக 350 ரன்களுக்கு மேல் நாம் சேஸிங் செய்யும் போது  சிறந்த தொடக்கம் இருக்க வேண்டும். நாங்கள் அவ்வாறு செய்யவில்லை.

அவர்கள்( இந்தியா) பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. புதிய பந்தில் இரண்டு பந்துவீச்சாளர்களும் சிறப்பாக வீசினர். ஆனால், நாளைய போட்டியை பொறுத்த வரை, எங்களது அணுகுமுறையை நாங்கள் மாற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தொடக்க 10 ஓவர்களில் அதிரடியாக ஆடி இந்திய பந்துவீச்சாளர்களுக்கு நாங்கள் நெருக்கடியை அளிக்க வேண்டும்.  இதை கட்டாக்கில் நாங்கள் செய்யவில்லை. ஆனால் இது நாளையை போட்டியில் நடைபெறும்” என்று தெரிவித்தார்.