Breaking News

நீங்கள் Google Chrome இணைய உலாவியை பயன்படுத்துபவரா?

கடவுச்சொல் இட்டு பாதுகாத்திட உதவுகின்றது Simple Startup Password எனும் Chrome இணைய உலாவிக்கான நீட்சி.

இதனை உங்கள் இணைய உலாவியில் நிறுவிக்கொள்வதன் மூலம் உங்கள் இணைய உலாவி திறக்கப்படும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் குறிப்பிட்ட கடவுச்சொல்லினை உள்ளிட்டே உள்நுழைய வேண்டும்.

இதன் மூலம் உங்கள் இணையம் ரீதியான தகவல்களை ஏனையவர்களிடமிருந்து பாதுகாத்திட முடிவதுடன் உங்கள் இணைய உலாவியின் அமைப்புக்கள் ஏனையவர்களால் மாற்றப்படுவதால் ஏற்படும் சிரமங்களில் இருந்தும் தவிர்ந்து கொள்ளலாம்.

நீங்களும் உங்கள் 'Google Chrome' இணைய உலாவியை கடவுச்சொல் இட்டு பயன்படுத்த விரும்பினால் குறிப்பிட்ட நீட்சியை பின்வரும் இணைப்பு மூலம் தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்.

https://chrome.google.com/webstore/detail/simple-startup-password/ojoalkffommhmdmbohjphohoejjmgepc

இந்த நீட்சி நிறுவப்பட்ட பின் உங்கள் இணைய உலாவியின் வலது மேல் மூலையில் இருக்கும் Customize and control எனும் Menu இன் ஊடாக Tools ===> Extension சென்று Simple Startup Password என்பதற்கு அருகில் இருக்கும் Option என்பதனை சுட்டி உங்களுக்கான கடவுச்சொல்லினை இட்டுக்கொள்ளுங்கள்.

அவ்வளவு தான்.

இனி உங்கள் இணைய உலாவியை திறக்கும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் குறிப்பிட்ட கடவுச்சொல்லினை உள்ளிட்டே உள்நுழைய முடியும்.