Breaking News

ராஞ்சி பெயரில் புதிய ஐபிஎல் அணியை வாங்கி ஆடப்போகிறாரா டோணி?

சென்னை: ராஞ்சியை மையமாக கொண்டு புதிய ஐ.பி.எல். அணி உருவாகவுள்ளதாகவும் அந்த அணியை டோணி வாங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அணி உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதான சூதாட்ட புகார் காரணமாக, ஐ.பி.எல். தொடரில் இரு சீசன்களில் பங்கேற்க சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேறு இரு நகரங்களை மையமாக கொண்டு ஐ.பி.எல். அணிகள் உருவாகவுள்ளன.

சென்னை அணி கேப்டனின் சொந்த ஊர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி என்பதால் ராஞ்சி பெயரில் ஐ.பி.எல். அணியை உருவாக்கி அதனை வாங்க டோணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

டோணிக்கு விளையாட்டு அணிகளை வாங்குவது ஒன்றும் புதிது கிடையாது. இந்தியன் சூப்பர் லீக்கில் விளையாடி வரும் 'சென்னையின் எப்.சி.,' ஹாக்கி இந்தியா லீக்கில் விளையாடும் ராஞ்சி அணி, மற்றும் மகி ரேஸிங் டீம் போன்ற விளையாட்டு அணிகள் டோணிக்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை