தாஜ்மஹால் குறித்த அனைத்து சர்ச்சைகளுக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் : யோகி ஆதித்யநாத் உறுதி
அயோத்யா: தாஜ்மஹால் குறித்த அனைத்து சர்ச்சைகளுக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று உத்ரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உறுதி அளித்துள்ளார். அயோத்தியாவில் தீபாவளி கொண்டாடிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தாஜ்மஹால் குறித்து பாரதிய ஜனதா, மற்றும் சங்க பரிவாரங்கள் வெளியிடும் விமர்சனங்களால் நாடு தழுவிய அளவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். தாஜ்மஹால் சர்வதேச சுற்றுலா ஸ்தலம் என்பதில் இருவேறு கருத்து இல்லை என்றார் அவர். தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது என்று கூறி பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோன் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
அதற்கு பதில் அளித்த ஆதித்யநாத் அது இந்திய தொழிலாளர்களின் உழைப்பில் கட்டப்பட்டது என்று கூறியதுடன் சங்கீத் சோனிடம் விளக்கமும் கேட்டுள்ளார். இதனிடையே தாஜ்மஹால் இந்து கோயில் என்றும், அதன் பெயர் தேஜு மஹால் என்று மாற்ற வேண்டும் என்று கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் பாஜக மூத்த தலைவரும் எம்பியுமான வினய் கத்தியார்.