எரி கற்கள் என ஆதர் சி கிளார்க் மையம் தெரிவிப்பு
இலங்கையின் தென் பகுதி கடற்பகுதியில் நேற்று (18) இரவு 8.45 - 9.00 இடைப்பட்ட காலப்பகுதியில் மர்மமான முறையில் பாரிய வெளிச்சத்துடனும், வெடிப்பு சத்தத்துடனும் மர்மமான பொருளொன்று வீழ்ந்துள்ளது.
தென் பகுதியிலுள்ள காலி, மாத்தறை, அக்குரஸ்ஸ, தெனியாய பகுதிகளில் உள்ள மக்களால் குறித்த வானிலிருந்து வெளிப்பட்ட ஒளி அவதானிக்கப்பட்டுள்ளது.
காலி மாத்தறை பகுதியிலுள்ளவர்கள், சம்பவத்தின்போது சிறு அதிர்வையும் உணர்ந்துள்ளனர்.
இது எரிகற்களின் வீழ்ச்சியாக இருக்கலாம் என ஆதர்சி கிளார்க் விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.