Breaking News

நாகப்பட்டினம் நாகையில் மாதாந்திர விளையாட்டு போட்டி 30ம் தேதி நடக்கிறது


நாகை,அக்.24: நாகையில் மாதாந்திர விளையாட்டு போட்டிகள் வருகிற 30ம் தேதி நடக்கிறது.நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வருகிற 30ம் தேதி காலை 9 மணியளவில் மாதாந்திர விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.  போட்டியில் தடகளம், கபாடி, வளை பந்து, நீச்சல் ஆகிய போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட உள்ளது. 


ஆண்களுக்கான தடகள  போட்டியில் 100 மீ, 800 மீ., 1500 மீ., நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், குண்டு மற்றும் வட்டு எறிதல் ஆகிய போட்டிகளும், பெண்களுக்கான தடகள  போட்டியில் 100 மீ., 400 மீ., 1500 மீ., நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், குண்டு மற்றும் வட்டு எறிதல் ஆகிய போட்டிகளும், நடைபெற உள்ளது. ஆண்கள்  மற்றும் பெண்களுக்கான நீச்சல் போட்டியில், 50 மீ., 100 மீ., 200 மீ., 400 மீ., ப்ரீ ஸ்டைல், 50 மீ. பேக் ஸ்ட்ரோக், 50 மீ. பிரஸ்ட் ஸ்ட்ரோக், 50 மீ. பட்டர்  பிளை ஸ்ட்ரோக், 200 மீ. ஐ.எம். ஆகிய போட்டிகளும் நடத்தப்பட உள்ளது. 


தடகளம், நீச்சல் ஆகிய போட்டிகளில் முதல் மூன்று இடங்களை  பெறுபவர்களுக்கும், கபாடி மற்றும் வளை பந்து போட்டிகளில் முதல் 2 இடங்களை பெறுபவர்களுக்கும், பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும். 

எனவே  போட்டிகளில் நாகை மாவட்டத்தை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் அதிகளவில் கலந்து கொண்டு பயன்பெறும்படி கலெக்டர்  சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.