நாகையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாகை,அக்.25: மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட்டில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பிற்கு 3 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
நல வாரியத்தில் தேங்கி உள்ள அனைத்து விண்ணப்பங்களையும் உடனடியாக பரிசீலனை செய்து பணப்பயன்களை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் முன், நாகை மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டு நடவடிக்கை குழு தலைவர் கீதா தலைமை வகித்தார். செயலாளர் திருப்பதி, ஏ.ஐ.டி.சி. மாவட்ட செயலாளர் ராமன், சி.ஐ.டி.யூ. மாவட்ட பொறுப்பாளர் முனியாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.