பயணிகளுக்கான சேவையை அதிகரிக்கும் விதமாக பிரத்தியேக ஆப் அறிமுகம் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி திட்டம்
புதுடெல்லி: பயணிகளுக்கான சேவையை அதிகரிக்கும் விதமாக தமது இணையதளத்தை புனரமைக்கவும், பிரத்தியேக ஆப் ஒன்றை அறிமுகம் செய்யவும் ரயில்வே நிர்வாகம் முயற்சி மேற்கொண்டுள்ளது. பயணிகள் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய வசதியாக ஐ.ஆர்.சி.டி.சி எனப்படும் இந்தியன் ரயில்வே கேடரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன், ஆன்ட்ராய்டு செயலி ஒன்றினை அறிமுகப்படுத்த இருக்கிறது.
இந்த செயலியின் மூலம் பயணச்சீட்டின் நகலை பார்வையிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். பயணத்திட்ட அட்டவணையை பயன்படுத்தி தங்களது பயணத்தை திட்டுமிட்டுக்கொள்ளலாம். ரயில்களின் புறப்படும் மற்றும் சென்று சேரும் நேரத்தை பயணிகள் எஸ்.எம்.எஸ் மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். ரயில் சேவை தாமதமானால் அதுகுறித்த தகவல்களையும் இந்த செயலி மூலம் பெற முடியும்.