நம்ம ஊரு நாகூரு நல்ல ஊருங்க..நாகூர் மெட்டு..!!
சந்தன கூடு நாகூர் தாங்க...
லந்து கொடுத்தா நாகூர் தாங்க...
சந்து தெருவா நாகூர் தாங்க...
கோதுமை கஞ்சி நாகூர் தாங்க...
காண்ட தண்ணி நாகூர் தாங்க...
ஸ்பெஷலு புரோட்டா நாகூர் தாங்க...
அதிலும் கொத்து புரோட்டா நாகூர் தாங்க...
துப்பட்டி துணையெல்லாம் நாகூரில் தாங்க...
வளையல் கடை லொள்ளு நாகூரில் தாங்க...
சிங்கப்பூர் கடை தில்லு நாகூரில் தாங்க...
பத்து ரூபாய் பீப் பகோடா நாகூரில் தாங்க...
வாசமுள்ள பால்கோவா நாகூர் தாங்க...
பாசமுள்ள பருத்திகொட்டை அல்வா நாகூர் தாங்க...
தம்ம்மான தம்ருட்டு நாகூரில் தாங்க...
குசும்பு குலாப்ஜாமுன் நாகூர் தாங்க...
கந்தூரி நடந்தா நாகூர் தாங்க...
கலவரம் நடந்தாலும் நாகூர் தாங்க...
தர்காக்கு பல கூட்டம் நாகூர் தாங்க...
பி ஜெக்கும் சில கூட்டம் நாகூர் தாங்க...
குண்டா சோறு நாகூர் தாங்க...
செம்சட்டி சோறும் நாகூர் தாங்க...
பாசன் செட்டு நாகூர் தாங்க...
ஃபேஷன் செட்டும் நாகூர் தாங்க...
குஞ்சாலி மரைக்காயருக்கு தெருவுண்டு நாகூரில் தாங்க...!!
கலிபா சாயிபிற்கும் தெருவுண்டு நாகூரில் தாங்க..!!
புது மனைக்கும் தெருவுண்டு நாகூரில் தாங்க...
மாரியம்மன் கோயிலுக்கும் தெருவுண்டு நாகூரில் தாங்க...
கருப்பு புர்காவில் வெள்ளை மனசும் நாகூர் தாங்க...
வெள்ளை துப்பட்டியில் நல்ல மனசும் நாகூர் தாங்க...
மங்காத்தா சுடிதார் நாகூர் தாங்க...
அம்பாசடர் காரில் பத்து பேரு நாகூர் தாங்க...
ஆவுகொச்சேனுன்னு அதிசயிச்சா நாகூர் தாங்க...
நல்லாம...நல்லா ன்னு ..ம்ம்ம் போட்டா நாகூர் தாங்க...
யோசிச்சு வெடைச்சா நாகூர் தாங்க...
யோசிக்காம நடிச்சா நாகூர் தாங்க...
கைலி சட்டை யுனிபார்ம் நாகூர் தாங்க...
கல்யாணத்துக்கு மட்டும் பேண்ட் போட்ட பல கூட்டம் நாகூர் தாங்க..!!
இவங்க உடுத்தும் கைலி, சட்டை மட்டும் வெள்ளை இல்லைங்க ; இங்கே வாழும் மக்களின் மனசும் வெள்ளை தானுங்க..
"இறைவனிடம் கையேந்துங்கள்" என்று பாடிய அண்ணன்
E M ஹனீபா வாழும் ஊரும் இந்த நாகூர்தாங்க..!
பீரோட தெருவு தந்ததும் இந்த நாகூர் தாங்க..!!
"வாடா" என்று சொன்னதும் நினைவுக்கு வர்றதும் இந்த நாகூர் தாங்க..!
வந்தாரை வாழவைக்கும் ஊரும் இந்த நாகூரு தாங்க..!!
நாகூரைப் பற்றி எழுத இன்னும் நிறைய இருக்கு... நாகூர் என்றாலே தர்கா மட்டும் தான் என்று பலபேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..