Breaking News

நாகையில் பணியில் உள்ள காவலர்களுக்கு தண்ணீர் பிஸ்கட் !


ஏப்.11,
நாகையில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருக்கும் காவலர்களுக்கு நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி MLA அறிவுறுத்தலின் பேரில் ரொட்டி மற்றும் தண்ணீரை மஜகவினர் வழங்கினர்.

முன்னதாக ஆய்வு பணிகளில் ஈடுப்பட்ட MLA அவர்கள், கொரோனா பரவல் தடுப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ள துப்புரவு மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோருக்கு தேநீர், பிஸ்கட், தண்ணீர் உள்ளிட்டவைகளை வழங்கிடுமாறு கேட்டுக் கொண்டார்.

அதனடிப்படையில், காவலர்களுக்கு பிஸ்கட் மற்றும் தண்ணீரை முரளி மற்றும் ரெக்ஸ் சுல்தான் உள்ளிட்ட மஜகவினர் வழங்கினர்.மேலும், சட்டமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் நாகூரில் துப்புரவு பணியாளர்களுக்கு முககவசம், சோப்பு, காலணி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அறுவுறுத்தலின் பேரில் வழங்கப்பட்டது !!
தகவல்,
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.

கருத்துகள் இல்லை