நாகை உட்பட தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் !!
கொரோனாவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள், பாதிப்பு அளவின் அடிப்படையில் மூன்று வண்ணங்களாக பிரிக்கப்பட்டு பட்டியில் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள் ஆகிய மூன்று நிறங்கள் பயன்படுதப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை, கோவை, ஈரோடு, நெல்லை, திண்டுக்கல், நாமக்கல், செங்கல்பட்டு, தேனி, திருச்சி, ராணிபேட்டை, திருவள்ளூர், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நாகை, கரூர், விழுப்புரம் ஆகிய 17 மாவடங்கள் சிவப்பு வண்ணத்தில் குறிக்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதை குறிப்பிடும் வகையில், சிவப்பு வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர், கடலூர், கன்னியாகுமரி, சேலம், திருவாரூர், விருதுநகர், தஞ்சை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 9 மாவட்டங்கள் ஆரஞ்சு வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
நீலகிரி, காஞ்சிபுரம், சிவகங்கை, தென்காசி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் குறைந்த பாதிப்பை கொண்டுள்ளதாக மஞ்சள் வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை