Breaking News

ஏப்ரல் 5, முக்கியமான நாள் 9 நிமிடங்களுக்கு மின் விளக்கை அணையுங்கள்- பிரதமர் மோடியின் வேண்டுகோள்


ஏப்ரல் 5, ஞாயிறன்று இரவு 9 மணிக்கு வீட்டில் விளக்குகளை அணைத்துவிட்டு, மாடி அல்லது வாசலில் இருந்து டார்ச், செல்போன் லைட்டை 9 நிமிடங்கள் ஒளிரவிடுங்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஏப்ரல் 5-ம் தேதி நமக்கு மிக முக்கியம். அன்று இரவு 9 மணிக்கு சரியாக 9 நிமிடம் வீட்டில் மின் விளக்குகளை அனைத்தைவிட்டு மெழுகுவத்தி, அகல் விளக்கு ஏற்றியும் அல்லது மொபைல் டார்ச் லைட்டை அடித்தும் வீட்டு பால்கனிகளிலும் ஒளியேற்றி வைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அதன் மூலம் ஒரு சூப்பர் பவர் உருவாகும். 

இந்த நிகழ்வின்போது அனைவரும் கட்டாயம் சமூக விலகளைக் கடைப்பிடிக்க வேண்டும். வீடுகளில் மட்டுமே விளக்கு ஏற்றுங்கள். 
நம் உற்சாகத்துக்கு மேலாக வேறு எந்த சக்தியும் இல்லை" என்றார்.





கருத்துகள் இல்லை