கொரோனா கண்காணிப்பு மொபைல் ஆப் அறிமுகம்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி நிர்வாகம் GCC CORONA Monitoring என்ற புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்த GCC CORONA Monitoring செயலியை பயன்படுத்துவது எப்படி?
- ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள், ப்ளே ஸ்டோரில் `GCC CORONA Monitoring’ செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும்.
- மொபைல் எண்ணைப் பதிவு செய்து, உங்கள் மொபைலுக்கு வரும் OTP-யை பதிவு செய்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
- இந்தச் செயலியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும், சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் கொண்டவர்களுக்கும் தனித்தனி பகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
- ஒருவருக்கு காய்ச்சல் இருக்கிறது என்றால், அதற்குரிய பகுதியில் ஒரு புகைப்படம் எடுத்து அப்லோடு செய்தால் போதும். நமது இருப்பிடம் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெறும்.
- உடனடியாக மருத்துவர்கள் தொடர்புகொண்டு பேசுவார்கள். கொரோனா இருப்பதற்கான சாத்தியம் இருப்பதாக மருத்துவர்கள் உணர்ந்தால், அந்தப் பகுதிக்கே மருத்துவக் குழுவை அனுப்பி பரிசோதனை செய்வார்கள்.
- வீட்டில் தனிப்படுத்தப்பட்டவர்கள், அதற்கான பகுதியில் புகைப்படத்தை அப்லோடு செய்வதன் மூலம் மருத்துவர்கள் தொடர்ந்து அவர்களைக் கண்காணிப்பார்கள்.
கருத்துகள் இல்லை