Breaking News

S.I.O சார்பாக நாகூர் கடற்கரையில் பட்டம் விடும் திருவிழா "KITE FESTIVAL" 2023

NAGORE KITE FESTIVAL 2023


சிறுவர்கள் தெருவில் விளையாடுவது இப்போதெல்லாம் மிகவும் அரிதாகிவிட்டது. நண்பர்களோடு ஓடி ஆடி விளையாடுவதில் உள்ள ஆனந்தமும் மனநிறைவும் இக்கால சிறுவர்
, சிறுமியர்க்கு தெரிவதில்லை. அதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

 நாம் சிறுவயதில் மாலை நேரங்களில் விளையாடிய கண்ணாம்பூச்சி, ஏழு கற்கள், திருடன்-போலீஸ், கபடி, ஆபியம், பம்பரம் போன்ற பல்வேறு வெளி விளையாட்டுகள் இப்போதெல்லாம் காணாமல் போய்விட்டன.

கூட்டாக விளையாடும்போது உடலோடு சேர்ந்து மனமும் ஆரோக்கியமடையும். ஆனால், தற்காலத்தில் கணினி, ப்லே ஸ்டேசன், மொபைல் ஃபோன், ஆகிவற்றிலேயே சிறுவர்கள் மூழ்கிக் கிடக்கிறார்கள். குறிப்பாக SCREEN ADDICTION என்னும் ஃபோனின் திரைக்கு அடிமையாகி சிறுவர்களின் கண்கள், (பார்வை திறன்), மூளை, (சிந்திக்கும் செயற்பாடு) போன்றவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.

நண்பர்களுடனான தொடர்பும் அவர்களுக்கு இல்லை. மிகவும் குறைவாகவே இருக்கிறது. மன ஆரோக்கியத்திற்கும் இது உகந்தது அல்ல.

இப்படியான சூழலை கவனத்தில் கொண்டு, S.I.O சார்பாக நாகூர் கடற்கரையில் வருகின்ற ஆகஸ்டு 13ம் தேதியன்று பட்டம் விடும் திருவிழா "KITE FESTIVAL" நடத்த இருக்கிறார்கள். வீட்டில் அடைந்துக் கிடக்கும் சிறுவர், சிறுமிகளை வீதிக்கு அழைத்துவருவதற்கான ஒரு முயற்சி இது.

நாகூர், நாகப்பட்டினம், காரைக்கால் பகுதியில் உள்ள அனைவரும் குடும்பத்தோடு வாருங்கள்..! அனைவருக்கும் இந்த செய்தியை சொல்லுங்கள்.

இடம் :நாகூர் கடற்கரை

தேதி : 13/08/2023


 

கருத்துகள் இல்லை