Breaking News

கேரளாவை வீழ்த்திய நாகூர் UNITED FC

நாகூர் கௌதிய்யா ஸ்போர்டிங் கிளப் நடத்தும் 60 ஆம் ஆண்டு தென்னிந்திய எழுவர் கால்பந்தாட்ட தொடர்போட்டியில்,


28/08/2023 இன்று நடைபெற்ற தென்னிந்திய ஏழுவர் கால்பந்தாட்ட தொடரில் மூன்றாம் கால்பகுதியில் முதல் சுற்று போட்டியில் கேரளா அணியினரும் நாகூர்
UNITED FC அணியினரும் விளையாடினர்.

 


விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பதியில் கோல் எதுவும் இல்லாமல் சம நிலையில் இருந்தனர். அடுத்த அரையிறுதி ஆட்டத்தில் நாகூர் அணியினர் இரண்டு கோலை அடுத்தடுத்து அடித்தனர், அட்டநேரம் முடிவில் கேரளா அணியினரை 3-2 என்ற கோல் கணக்கில் நாகூர் UNITED FC அணியினர் வெற்றி பெற்றனர்.

இதில் சிறப்பாக விளையாடி நாகூரை சார்ந்த WASIL மற்றும் THARIQ  தலா ஒரு கோல் அடித்து அசத்தினார்.

 


இன்ஷா அல்லாஹ் 29/08/2023 நாளை நடக்க உள்ள இரண்டாம் சுற்று போட்டியில் நாகூர் மற்றும் காரைக்கால்-அணியினர் எதிர்த்து விளையாட உள்ளனர்.



கருத்துகள் இல்லை