Breaking News

அரபு நாட்டில் இந்திய தொழிலாளர் 37 பேர் தற்கொலை :அதிர்ச்சி தகவல்!!


துபாய்:அரபு நாடுகளில் வேலை பார்த்து வந்த இந்திய தொழிலாளர்கள் 37 பேர் இந்தாண்டு தற்கொலை செய்திருக்கின்றனர். மேலும், அரபு நாட்டில் வசிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கான உதவி எண்ணில் கடந்த ஆண்டு மட்டும் 14 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன.அரபு நாட்டில் வசிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை களைவதற்காக துபாயில் இந்திய தொழிலாளர்கள் நல மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்திய தொழிலாளர்களின் பல்வேறு சிக்கல்களை தீர்ப்பதற்காக கடந்த 2010ம் ஆண்டு இந்திய அரசால் இது நிறுவப்பட்டது. தொழிலாளர்களுக்கு ஏற்படும் சட்ட, மனரீதியான, பொருளாதார பிரச்னைகளை இந்த மையம் இலவசமாக தீர்த்து வைக்கிறது. 

இதற்காக 80046342 என்ற இலவச தொலைபேசி அவசர தொடர்பு எண்ணையும் அறிவித்துள்ளது. இந்த எண்ணில் உதவி கேட்டு கடந்த 2013ம் ஆண்டு மட்டும் 14 ஆயிரத்திற்கும் அதிகமான அழைப்புகள் வந்துள்ளன. இவற்றில் பெரும்பாலும் வேலை சிக்கல்கள் தொடர்பாக பல இந்திய தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் 2014ம் ஆண்டு ஜூன் வரை அரபு நாடுகளில் வேலை செய்து வந்த 37 இந்திய தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் இந்தியர்கள் அரபு நாடுகளில் வேலை செய்து வருகின்றனர். இந்த அவசர சேவை அழைப்பு மூலமாக இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் உதவி கேட்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

No comments