Breaking News

காஸ் சிலிண்டர் புக் செய்யும்போது போனில் பூஜ்யத்தை அழுத்தினால் மானியம் ரத்தாகுமா?

டெல்லி: போனில் காஸ் சிலிண்டருக்காக பதிவு செய்யும்போது பூஜ்யத்தை அழுத்தினால் மானியம் ரத்தாகாது என ஐஓசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொலைபேசி வழியாகவே தற்போது காஸ் சிலிண்டர்களுக்கான புக்கிங் நடைபெறுகிறது. வாய்ஸ் மெசேஜ் கூறும், வழிகாட்டுதல் படி தேவைப்படும் நம்பரை அழுத்தி காஸ் புக் செய்யலாம். காஸ் சிலிண்டர் புக் செய்ய ஒன்றை அழுத்துக என்று வாய்ஸ் மெசேஜ் கூறும். மானியம் வேண்டாம் என்போர் பூஜ்யத்தை அழுத்துக என்று கூறும்.

போன் செய்பவர் தெரியாத்தனமாக பூஜ்யத்தை அழுத்திவிட்டால், மானியம் ரத்தாகிவிடுமே என்ற அச்சம் வாடிக்கையாளர்களுக்கு உள்ளது.

இதுகுறித்து இந்திய ஆயில் கழக அதிகாரிகள் கூறியுள்ளதாவது: மானியம் வேண்டாம் என்ற பட்சத்தில் பூஜ்யத்தை அழுத்திய பின்பு, அதை உறுதி செய்ய 7ம் எண்ணையும் அழுத்த வேண்டும். ஒருவேளை, தெரியாமல், இரு எண்களையுமே வாடிக்கையாளர் அழுத்திவிட்டாலும், பாதகமில்லை.

காஸ் முகவரை தொடர்பு கொண்டு காஸ் மானியத்தை திரும்ப பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை