Breaking News

Google தேடியந்திரத்தின் அமைப்பினை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.


இன்று இணையத்தின் மூலம் ஏதாவது ஒரு தகவலை தேடிப்பெற வேண்டும் எனின் நம்மில் அநேகமானவர்களின் நினைவுக்கு வருவது Google தேடியந்திரமே ஆகும்.

அந்த வகையில் சிறியோர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அறிந்து வைத்திருக்கும் இந்த தளத்தின் மூலம் பயனுள்ள ப
ல தகவல்களை தேடிப்பெற முடியும். இருந்தாலும் இதன் மறுபக்கம் பார்க்கையில் சில கசப்பான விடயங்களும் இருக்கவே செய்கின்றன.

எனவே இணையத்தில் இருக்கக் கூடிய அனாவசியமான தளங்களை வடிகட்டி பயனுள்ள தளங்களை மாத்திரம் தேடல் முடிவில் காண்பிக்கும் வகையில் Google தேடியந்திரத்தின் அமைப்பினை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.

இதனை நீங்களும் மேற்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க. 

   
  https://www.google.com/preferences

பின் SafeSearch Filters என்பதற்குக் கீழ் இருக்கும் Filter explicit results என்பதில் Tick அடையாளத்தை இடுக.

பின் கீழே தரப்பட்டிருக்கும் Save என்பதை சுட்டுக.

அவ்வளவுதான். 


★ இதன் மூலம் உங்கள் சிறார்கள் தவறான வழியில் செல்வதிலிருந்தும் அவர்களை பாதுகாத்திடலாம்.