டேட்டா பேக்கில் அதிக கட்டணம் வசூலிக்கும் செல்போன் நிறுவனங்களை எதிர்த்து போராட அழைப்பு
கடந்த சில வருடங்களாகேவே செல்போன் நிறுவனங்கள் மீது பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். உபயோகிப்பவரின் செல்போனில் ஒரு நிமிடம் பேசியதாக காட்டும்போது செல்போன் நிறுவனம் 1 நிமிடம் 1 செகண்ட் பேசியதாக கூறி இரண்டு நிமிடத்திற்கான கட்டணத்தை வசூலிப்பதாக பொதுமக்கள் பலர் பரவலாக புகார் தெரிவித்துள்ள நிலையில், தற்போது டேட்டா கார்டிலும் செல்போன் நிறுவனங்கள் அதிக கட்டணத்தை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
செல்போன் நிறுவனங்களின் கட்டண உயர்வை கண்டித்து வரும் அக்டோபர் 31-ந் தேதி வாடிக்கையாளர்கள் அனைவரும் மொபைல் டேட்டா கனெக்சனை ஆப் செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரிமாறப்படும் தகவல்களை மக்கள் பார்வைக்கு வைக்கின்றோம்.
சமீபகாலமாக நாம் உபயோகிக்கும் மொபைல் நெட்வொர்க்கின் நெட் பேக் ஒரு காலத்தில் 1GB டேட்டாவை ரூ. 68 க்கு 30 நாட்களுக்கு வழங்கிய செல்போன் நிறுவனங்கள் பின்பு ரூ.80-க்கு விலையை உயர்த்தி 1 GB டேட்டாவை 900 MB ஆக குறைத்தது. அதன் பின் நாளுக்கு நாள் உயர்த்தப்பட்டு இன்று 1GB-2G 28 நாட்களுக்கு ரூ.128 ஆகவும், ரூ.128க்கு கிடைத்த 3G 30 நாள் நெட்பேக்கை 28 நாட்களாக குறைத்து அதையும் ரூ.198-க்கு உயர்த்தி வசூலிக்கின்றன செல்போன் நிறுவனங்கள். இதற்கு முக்கிய காரணம் இன்டர்நெட் நம்முடைய அன்றாட தேவையாக இருப்பது தான்.
இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறோம் ஆகவே ஸிம் கம்பெனி நெட் பேக் மூலமாக தனது வருமானத்தை பெருக்கிக்கொண்டது. இவர்களுக்கு தெரியும் நாம் ஒரு போதும் இதை எதிர்த்து குரல் எழுப்ப மாட்டோம் என்று. ஆனால் அது உண்மையல்ல நாம் இந்தியர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எதிர்ப்போம், வரும் அக்டோபர் 31 அன்று MOBILE DATA CONNECTION. DISABLE செய்து எதிர்ப்பை தெரிவிப்போம். அக்டோபர் 31-ந் தேதியன்று கர்நாடகம், ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஒரிஸா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் என அனைத்து மாநிலங்கலிலும் இந்தச் செய்தி மொழிபெயர்ப்புடன் அனுப்பபட்டுள்ளது.
ஆகவே 31-ந் தேதி மொபைல் இண்டர்நெட்டை உபயோகிக்க வேண்டாம் என்று வாடிக்கையாளர்கள் சார்பில் செய்தி பரிமாறப்பட்டுள்ளது.