கூகுள் நெக்சஸில் அறிமுகமாகும் ஆண்ட்ராய்டின் லாபிபாப் வெர்ஷன்
இந்த மாதத்தில் வெளியாக உள்ள கூகுள் நெக்சஸ் தயாரிப்புகளான நெக்சஸ் 6 ஸ்மார்ட்போன், நெக்சஸ் 9 டேப்லெட்,மற்றும் நெக்சஸ் ப்ளேயர் ஆகியவற்றில் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தின் புதிய வெர்ஷன் ஓ.எஸ் ஆன ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் வசதியுடன் வெளியாகவுள்ளது.
இந்த புதிய வெர்ஷன் புதிய திரை வடிவமைப்புகளையும், பயன்பட்டாளர்களுடனான யூசர் இன்டர்ஃபேஸ் அதிகம் கொண்டதாகவும், ஒரே நேரத்தில் அதிக வேலைகளை செய்யும் மல்டி டாஸ்கிங் திறன் கொண்ட ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இது இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. குரல்வழி செயல்முறையும் இது புரிந்து கொண்டு செயல்படும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வெளியிடப்பட்ட ஆண்ட்ராய்டின் அனைத்து வெர்ஷன்களும் ஏதாவது ஒரு உணவுப்பொருளின் பெயராகவே இருந்து வந்தது. உதாரணமாக ஐஸ் கிரீம் சான்ட்விச், ஜெல்லிபீன், கிட்கேட் என்ற வரிசையில் தற்போது லாலிபாப் என்ற வெர்ஷனை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மாத இறுதிக்குள் இந்த தொழில்நுட்ப வசதியுடன் கூகுள் நெக்சஸின் புதிய மாடல் செல்போன்கள் அறிமுகப்படுத்தபடலாம் என்று கூறப்படுகிறது.நெக்சஸ் போனில் தான் முதல் முறையாக லாலிபாப் ஓஎஸ் பயன்படுத்தப்படுகிரது என்பதும் குறிப்பிடத்தக்கது. கூகுள் நெக்சஸில் அறிமுகமாகும் ஆண்ட்ராய்டின் லாபிபாப் வெர்ஷன்