ஐபோனின் ப்ளாஸ்சுக்கு பக்கத்தில் சிறிய துவாரம் இருக்கும்.. ஏன் என்று தெரியுமா?
ஆப்பிளின் ஐபோனை பயன்படுத்தும் பலர், அந்த போனில் உள்ள ஆப்சன்கள் மற்றும் அமைப்புகள் குறித்து எந்த அளவிற்கு முழுமையாக தெரிந்து வைத்துள்ளார்கள் என்ற கேள்வி எழுகிறது.
ஏனெனில் அந்த போனில் உள்ள ஆப்சன்கள் மற்றும் அமைப்புகள் குறித்து பலருக்கும் தெரியாது. ஒவ்வொரு நாளும் பல விஷயங்களை ஐபோனில் பார்ப்பவர்களுக்கு, அதின் அமைப்புகள் எப்படி செயல்படுகிறது என்பது அறியாத ஒன்றாகவே இருக்கிறது.
ஐபோனில் கேமராவிற்கும், ப்ளாஸ்க்கும் நடுவே ஏன் ஒரு துவாரம் இருக்குகிறது (Small Black Hole) என்பது தெரியுமா? அதை நீங்கள் ரீசட் பட்டன் (reset button) அல்லது ஏதாவது ஒன்றாக இருக்கும் என்று நினைப்பீர்கள்.
ஆனால் அது ரீசட் துவாரம்(reset hole) கிடையாது. அந்த இடம் போனின் மைக் இருக்கும் இடம் ஆகும்.
அந்த சின்ன துவாரம் தான் மைக்ரோ போன் ஆகும் . தொழில்நுட்ப ரீதியாக இவை மைக்ரோபோன் கிடையாது . அப்புறம் ஏன் அதை பயன்படுத்துகிறார்கள் என்று தெரியுமா?
இந்த மைக்ரோபோன் ஆடியோவில் வரும் தேவையற்ற இரைச்சல்களை நீக்கும் என்று கூறுப்படுகிறது(noise canceling microphone)
பேசும்போது பின்பக்கத்தில் வரும் இரைச்சலை நீக்கி, கிளியராக ஆடியோ கேட்க வைக்கும் வகையில் அந்த மைக்ரோபோன் செயல்படுகிறது.
கருத்துகள் இல்லை