Breaking News

புளூவேல் விளையாட்டு ஒரு தேசிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது


புதுடெல்லி: ஆபத்தான புளூவேல் விளையாட்டு குறித்து தூர்தர்ஷனும், தனியார் டிவி சேனல்களும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பலரின் உயிரை குடித்துள்ள புளூவேல் விளையாட்டிற்கு தடை விதிக்க வலியுறுத்தி தாக்கலான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தலைமை அமர்வு இவ்வாறு கூறியுள்ளது. புளூவேல் விளையாட்டு ஒரு தேசிய பிரச்சனையாக மாறிவிட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 

                                      
எனவே பிரைம் டைம் எனப்படும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தில் புளூவேல் குறித்த விழிப்புணர்வு காட்சிகளை ஒளிப்பரப்ப வேண்டும் என்று அவர்கள் தொலைக்காட்சிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.


முன்னதாக இந்த வழக்கில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த 15-ம் தேதி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியது. இதற்கு பதிலளிக்க மத்திய அரசு வழக்கறிஞர் புளூவேல்லை தடை செய்வது தொடர்பாக நிபுணர் குழுவை அமைத்துள்ளதாக தெரிவித்தார். 3 வாரங்களுக்குள் அதன் அறிக்கை கிடைத்த பின் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அவர் உறுதியளித்தார்.