300 ஜிபி இண்டர்நெட் டேட்டா என்ற புதிய சலுகையை அறிவித்துள்ளது Airtel
3 ஆயிரத்து 999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 360 நாட்களுக்கு அளவில்லாத லோக்கல், எஸ்டிடி அழைப்புகளுடன், 300 ஜிபி இண்டர்நெட் டேட்டா என்ற புதிய சலுகையை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்திய செல்போன் சேவைத்துறையில் அதிரடியாக நுழைந்த ஜியோவால், ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இதைத் தொடர்ந்து, ஜியோ நிறுவனமும், கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகளை அறிவித்துள்ளது.
இதனால், தனது வாடிக்கையாளர்களை தக்கவைக்க முடிவு செய்துள்ள ஏர்டெல் நிறுவனம், 999 ரூபாய் முதல் 3 ஆயிரத்து 999 ரூபாய் வரையிலான 3 ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும்போது, இண்டர்நெட் டேட்டாவுடன் அளவில்லாத லோக்கல் மற்றும் எஸ்.டி.டி. அழைப்புகளும், நாளொன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ்.களும் இலவசம் என்றும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.