Breaking News

உடல்நலக்குறைவுக்கு பதில் சொல்லும் கூகுள் டாக்டர்!


யாரவது ஒருவருக்கு உடல் நலம் சரியில்லை எனில் உடனடியாக டாக்டரை அணுகுகிறோம். ஆனால் அதற்கு நாம் இருக்கும் இடத்தில் இருந்து மருத்துவமனை வரை செல்ல வேன்டியுள்ளது. சாதரண காய்ச்சல் என்றாலும் கூட நீண்ட தொலைவு செல்ல வேண்டிய சூழல் கொண்ட இடங்களும் இருக்கதான் செய்கின்றன. இனி அதற்கு தேவையில்லை என வந்திருக்கும் புதிய தொழில்நுட்பம் தான் கூகுள் ஹெல்பவுட்.

இதுவரை நமக்கு தெரியாத தகவல்களை தேடிதந்த கூகுள் நமது நோய்க்கும் டாக்டரை தேடி தரப்போகிறது. இதன் மூலம் நாம் நமது உடல்நலக்குறைவை தேடினால் அது தொடர்புடைய மருத்துவரை நமக்கு அறிமுகப்படுத்தி அவரது ஆலோசனை வீடியோவையும் நாம் பார்த்து பயன்பெறலாம் என்கிறது கூகுள்.

தற்போது அறிமுக மற்றும் சோதனை நிலையில் உள்ள இந்த சேவை விரைவில் உல்கம் முழுவதும் கொண்டுவரப்படும் என்கிறது கூகுள். சோதனை முயற்சியில் மட்டும் இந்த ஆன்டும் 1 மில்லியன் பேர் இந்த சேவையை பயன்படுத்துவார்கள் என்று கூறியுள்ளனர். இதற்கு வருங்காலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என்றும் கணித்துள்ளனர்.

இதனிடையே ஆப்பிள் நிறுவனமும் தனது புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நம் உடல் நிலையை கவனிக்க கூடிய ஆஃப்ஸை வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த முயற்சிகள் மருத்துவ துறையில் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு வழிவகை செய்வதாக அமையும் என்கின்றனர் சிலர்.