வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டது ஃப்ளிப்கார்ட்
திங்கட்கிழமை பிக் பில்லியன் டே மூலம் அதிகமான பொருட்களை ஆஃபரில் விற்ற ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தனது ஒரு பில்லியன் வாடிக்கையாளர் பார்வையிடலை எட்டி சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி 600 கோடி ரூபாய்க்கு விற்பனையும் செய்தது. அதே சமயத்தில் ஆன்லைனில் பொருள் வாங்கியவர்களுக்கு சரியான சேவையை அளிக்க முடியாமல் போய் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது ஃப்ளிப்கார்ட்.
இந்நிலையில் நேற்று ஒவ்வொரு வாடிக்கையாளருக்கு தனித்தனியே ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்கள் சச்சின் மற்றும் பென்னி பன்சால் மின்னஞ்சல் மூலம் மன்னிப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இந்த கடிதத்தில் விலையில் ஏற்பட்ட மாற்றத்திற்காகவும், ஸ்டாக் இல்லை என்ற அறிவிப்புகள் சிறிது நேரத்தில் தோன்றியதற்காகவும், புக் செய்த பொருட்கள் தனாகவே ரத்து செய்யப்பட்டதற்காகவும், இணையதல சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஆகிய காரணங்களை முன் வைத்து மன்னிப்பு கேட்டுள்ளனர் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தினர்.
இதற்கு ஈடு செய்யும் விதமாக ஒரு சில பொருட்களை தனாக ரத்து செய்ததற்காக வாடிக்கையாளர்களின் கணக்கில் டிஸ்கவுண்ட் கூப்ப்ன்களை 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை வழங்கியுள்ளனர். இது குறித்து பதிவு செய்த பொருளை வாங்க முடியாமல் போன வாடிக்கையாலரிடம் கேட்டபோது நான் ஒரு செல்போனை 1500 ரூபாய்க்கு புக் செய்தேன் ஆனால் அது 5500 ரூபாய்க்கு புக் ஆனது அதுவும் ஒரு நாளில் ரத்து செய்யப்பட்டது என்ற அறிவிப்பு வந்தது. அதோடு 500 ரூபாய் மதிப்புள்ள கூப்பன் ஒன்றையும் வழங்கியுள்ளனர். அதற்கு எதாவது பொருள் வாங்கலாம் என்றால் 2000 ரூபாய்க்கு மேற்பட்ட பொருளை வாங்கும் போது தான் இதனை பயன்படுத்தி கொள்ள முடியும் என்கிறார்கள். இப்படி விதிமுறைகளில் இதுபோன்ற நிறுவனங்கள் விதிப்பதால் ஆன்லைனை விடுத்து ஒருநாள் செலவழிந்தாலும் பரவாயில்லை நேரில் சென்று கடைகளில் வாங்க போகிறேன் என்றார்.
இப்படிபட்ட தவறுகள் மீண்டும் இதுபோன்று நடக்காது என்று மன்னிப்பு கேட்டு நேற்று கடிதத்தை வெளியிட்ட ஃப்ளிப்கார்ட். இன்னமும் சில ஆஃபர்களை வழங்கி வருகிறது. அடுத்ததாக 10ம் தேதி முதல் விற்பனையை துவங்கும் அமேசான் இதனை சமாளிக்குமா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.
ஃப்ளிப்கார்ட்டின் மன்னிப்பு கடிதம்: